< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிக்கமகளூருவில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி
|29 Aug 2023 12:15 AM IST
சிக்கமகளூருவில் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி நடைபெற்றது.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா முகலவள்ளி கிராமத்தில் நேற்றுமுன்தினம் தேசிய அளவிலான கார் பந்தய போட்டி நடந்தது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியானது 2 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. நேற்றுமுன்தினம் விடுமுறை தினம் என்பதால் கார் பந்தயத்தை காண பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் குவிந்தனர்.
அவர்கள் கார் பந்தயத்தை பார்த்து உற்சாகம் அடைந்தனர். போட்டியில் ஒருசில கார்கள் விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கார் பந்தய போட்டியை காண ஏராளமானோர் குவிந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.