< Back
தேசிய செய்திகள்
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Image Courtacy: PTI

தேசிய செய்திகள்

'நேஷனல் ஹெரால்டு' வழக்கு: சோனியா காந்தியிடம் விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

தினத்தந்தி
|
23 July 2022 12:21 AM IST

‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கில் சோனியா காந்தியிடம் நடைபெறும் விசாரணை 26-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

அன்று விசாரணை முடிவடையாத நிலையில், 25-ந்தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டு இருந்தது. ஆனால் இந்த விசாரணை ஒரு நாள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் 26-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

எனினும் இந்த விசாரணை தள்ளி வைப்புக்கான காரணத்தை அமலாக்கத்துறை வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்