< Back
தேசிய செய்திகள்
ஆகஸ்ட் 13- 15ம் தேதி வரை மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 13- 15ம் தேதி வரை மக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்: அமித்ஷா வலியுறுத்தல்

தினத்தந்தி
|
24 July 2022 5:46 PM IST

ஆகஸ்ட் 13- 15ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டுமென அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் தேசியக் கொடியை ஏற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலிறுயுறுத்தி உள்ளார்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் போபால் மற்றும் குமா பகுதிகளுக்கான குடிநீர் வழங்கல் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது அவர் தனது தொகுதியின் கீழ் 211 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அமித் ஷா உரையாற்றியதாவது:-

இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. குடிநீர் வழங்கல் திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் வீடுகளுக்கு சுத்தமான நர்மதா குடிநீர் உறுதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபடி, சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 75 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சியின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேசபக்தி உணர்வை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தெரிந்த மற்றும் அறியப்படாத நமது சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூர்வதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். தபால் அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்கள், மாநகராட்சிகள் மற்றும் இ-காமர்ஸ் இணையதளங்களில் தேசியக் கொடிகள் கிடைக்கும்.

பொதுமக்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தி அதனுடன் செல்ஃபி எடுத்து மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆகஸ்ட் 13 முதல் 15 வரையிலான மூன்று நாள் பிரச்சாரத்தின் போது நாடு முழுவதும் 20 கோடி மூவர்ணக் கொடிகள் ஏற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்