< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜி20 மாநாடு மண்டபத்தில் தமிழகத்தின் நடராஜர் சிலை - பிரதமர் மோடி பெருமிதம்
|6 Sept 2023 3:54 PM IST
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஜி-20 மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டிற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தின் முகப்பில், தமிழகத்தில் தயாரான பிரமாண்ட நடராஜர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாசாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண் முன்னே நிறுத்துகிறது.
ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.