< Back
தேசிய செய்திகள்
2½ மாதங்களில் நந்தினி நெய் லிட்டருக்கு ரூ.180 உயர்வு
தேசிய செய்திகள்

2½ மாதங்களில் நந்தினி நெய் லிட்டருக்கு ரூ.180 உயர்வு

தினத்தந்தி
|
8 Nov 2022 3:14 AM IST

2½ மாதங்களில் நந்தினி நெய் லிட்டருக்கு ரூ.180 உயர்த்தப்பட்டு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பால் விலை நிர்ணயம் மற்றும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பால் விற்பனை விலையை அதிகரிக்க கோரி கூட்டமைப்பு சார்பில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு அதற்கு அனுமதி வழங்காமல் உள்ளது. அண்மையில் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்த பால் உற்பத்தி கூட்டமைப்பு திட்டமிட்டது.

இந்த நிலையில் பால் விலையை அரசு உயர்த்தாததால், நந்தினி நெய் விலையை கடந்த 2½ மாதத்தில் கூட்டமைப்பு ரூ.180 வரை உயர்த்தி உள்ளது. படிப்படியாக உயர்த்தியதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய பாதிப்பு வெளிப்படவில்லை. கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு லிட்டர் நந்தினி நெய் ரூ.450-க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு லிட்டர் ரூ.620 முதல் ரூ.630 வரை விற்கப்படுகிறது. இதனால் நெய் கொண்டு தயாரிக்கப்படும் பலகார வகைகள் விலையும் உயர வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்