< Back
தேசிய செய்திகள்
நாக்பூர்-ஷீரடி இடையிலான 6 வழி விரைவுச்சாலை - டிசம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
தேசிய செய்திகள்

நாக்பூர்-ஷீரடி இடையிலான 6 வழி விரைவுச்சாலை - டிசம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

தினத்தந்தி
|
2 Dec 2022 7:43 PM IST

நாக்பூர்-ஷீரடி இடையே 6 வழிச்சாலையாக 520 கி.மீ. சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை-நாக்பூர் இடையே 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 701 கி.மீ. நீளத்திற்கு விரைவுச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை 10 மாவட்டங்கள், 26 தாலுக மற்றும் 392 கிராமங்களை இணைக்கிறது. இதன் மூலம் நாக்பூர்-மும்பை இடையிலான பயண நேரம் 16-ல் இருந்து 8 மணி நேரமாக குறையும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மார்க்கத்தில் நாக்பூர்-ஷீரடி இடையே 6 வழிச்சாலையாக 520 கி.மீ. சாலை அமைக்கும் பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்த்து இந்த சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வரும் டிசம்பர் 11-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்