< Back
தேசிய செய்திகள்
நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி
தேசிய செய்திகள்

நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி

தினத்தந்தி
|
25 April 2023 4:00 AM IST

நாக்பூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

தொழிற்சாலையில் பயங்கர தீ

நாக்பூர் மாவட்டம் சோனேகாவ் நிபானி எம்.ஐ.டி.சி. பகுதியில் கடாரியா ஆக்ரோ என்ற தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று வழக்கம் போல தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். இந்தநிலையில் காலை 11 மணியளவில் திடீரென நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்தவுடன் தொழிலாளர்கள் வெளியே ஓடி வந்தனர். சிலர் உள்ளே மாடிக்கொண்டனர்.

இதற்கிடைய சில நிமிடங்களில் தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதை தொடர்ந்து அங்கு இருந்த சில பொருட்கள் பயங்கர சத்த்துடன் வெடித்து சிதறியது. அந்த பகுதியே புகை மண்டலமானது.

3 தொழிலாளர்கள் பலி

தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனா். அவர்கள் பல மணி நேரம் போராடி தொழிற்சாலையில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தொழிற்சாலையில் சிக்கி தீக்காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தீக்காயம் அடைந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்