< Back
தேசிய செய்திகள்
நீங்கள் அழகாக இருந்தால் இது தான் நிலைமை- மீண்டும் கவனம் ஈர்த்த நாகாலாந்து மந்திரி..!!

Image Courtesy: Twitter @AlongImna

தேசிய செய்திகள்

"நீங்கள் அழகாக இருந்தால் இது தான் நிலைமை"- மீண்டும் கவனம் ஈர்த்த நாகாலாந்து மந்திரி..!!

தினத்தந்தி
|
26 Sept 2022 6:05 PM IST

டெம்ஜென் இம்னா மீண்டும் ஒருமுறை தனது கருத்தின் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

கோஹிமா,

நாகாலாந்து மாநிலத்தின் பழங்குடியினர் விவகார மந்திரி டெம்ஜென் இம்னா அலோங். இவர் தனது நகைச்சுவை மற்றும் சர்ச்சை பேச்சுக்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். தனது கருத்துக்கள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் தனி இடத்தை டெம் ஜென் இம்னா பிடித்துள்ளார்.

மக்கள் தொகை குறித்து சமீபத்தில் பேசிய இவர் "மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த எப்போதும் சிங்கிளாக (Single) இருங்கள்" என தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து ஒருமுறை வடகிழக்கு இந்தியர்களின் கண்கள் குறித்து பேசிய இவர் 'எங்கள் கண்கள் சிறிதாக இருப்பதால் நிகழ்ச்சிகளின் போது தூங்குவதற்கு வசதியாக இருக்கும்' என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இவர் தற்போது மீண்டும் ஒருமுறை தனது கருத்தின் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

சமீபத்தில் பொது இடம் ஒன்றில் டெம்ஜென் இம்னாவை பார்த்த பொது மக்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கும் மந்திரி டெம்ஜென், "நீங்கள் அழகாகவும் சிங்கிளாகவும் இருந்தால், எங்கு சென்றாலும் புகைப்படம் எடுப்பவர்களை கவர்ந்து விடுவீர்கள், பிரபலத்தை போல உணர்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த டுவிட் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்