< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாகலாந்து: சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பிய 9 கைதிகள்
|20 Nov 2022 2:25 PM IST
நாகலாந்தில் சிறையின் இரும்பு கதவை உடைத்து, தப்பி சென்ற 9 கைதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
மோன்,
நாகலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டத்தில், மாவட்ட சிறை ஒன்று உள்ளது. இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 கைதிகள் நேற்று தப்பியோடி விட்டனர் என துணை மண்டல காவல் அதிகாரி அபோங் யிம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.
அவர்களில் 2 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மற்ற 7 பேர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். கைதிகள் அனைவரும் சிறை அறையின் இரும்பு கதவை உடைத்தும் மற்றும் கைவிலங்கு சங்கிலியை உடைத்தும் சிறையில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மோன் நகர காவல் நிலையத்தில் இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.