< Back
தேசிய செய்திகள்
மைசூரு-சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து
தேசிய செய்திகள்

மைசூரு-சென்னை 'காவேரி' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து

தினத்தந்தி
|
28 Jun 2024 4:23 AM IST

மைசூரு-சென்னை ‘காவேரி’ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு கெங்கேரி-ஹெஜ்ஜலா இடையேயும், கே.எஸ்.ஆர். பெங்களூரு-பெங்களூரு கன்டோண்மென்ட் இடைேயயும் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் சில ரெயில்கள் சேவை முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு 'காவேரி' எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16021) அடுத்த மாதம் (ஜூலை) 1, 2, 8, 9 ஆகிய 4 நாட்கள் முழுமையாாக ரத்து செய்யப்படுகிறது.

* மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் 'காவேரி' எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) அடுத்த மாதம் 2, 3, 9, 10 ஆகிய 4 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

* சாம்ராஜ்நகர்-திருப்பதி தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16219) அடுத்த மாதம் 1 மற்றும் 8 ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-திருப்பதி-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (16203/04), திருப்பதி-சாம்ராஜ்நகர் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16220), அரிசிகெரே-மைசூரு பயணிகள் சிறப்பு ரெயில் (06267), மைசூரு-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-மைசூரு பயணிகள் சிறப்பு ரெயில் (06269/70), மைசூரு-கே.எஸ்.ஆர். பெங்களூரு 'ெமமு' (06560), கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் அதிவிரைவு ரெயில் (12658) ஆகியவை ஜூலை 2 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

* மைசூரு-அரிசிகெரே பயணிகள் சிறப்பு ரெயில் (06268), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மைசூரு மெமு (06559), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்னப்பட்டணா மெமு (01763), டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) ஆகியவை அடுத்த மாதம் 3 மற்றும் 10 ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு அதிவிரைவு ரெயில் (12657) வருகிற 2 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் ஒயிட்பீல்டு-கே.எஸ்.ஆர். பெங்களூரு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதாவது ஒயிட்பீல்டு வரை மட்டுமே இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்