மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்றும், நாளையும் ரத்து
|பராமரிப்பு பணிகள் காரணமாக மைசூரு-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
தமிழ்நாடு சோமநாயக்கனபட்டி-ஜோலார்பேட்டை இடையே ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி நடந்து வருவதால், பெங்களூரு-சென்னை உள்பட சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16021) இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
* மைசூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) இன்றும், நாளையும் (திங்கட்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.
* மைசூரு-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (20623), கே.எஸ்.ஆர். பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (20624) ரெயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) இன்றும், எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12657) இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
* எர்ணாகுளம்-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (12683) இன்றும், எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (12684) நாளையும் ரத்து செய்யப்படுகிறது.
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16526) கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டு, மாலூர், பங்காருபேட்டை, குப்பம், திருப்பத்தூர் வழியாக இயங்குவதற்கு பதிலாக இன்று கே.எஸ்.ஆர். பெங்களூருவில் இருந்து கண்டோன்மெண்ட், பையப்பனஹள்ளி, ஓசூர், தர்மபுரி, ஓமலூர், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்க உள்ளது.
* கோவை-ஹசரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் (12647) கே.ஆர்.புரம், எலகங்கா, இந்துப்பூர், தர்மாவரம், அனந்தபூர் வழியாக இயங்குவதற்கு பதிலாக இன்று சேலம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா வழியாக மாற்றுப்பாதையில் இயங்க உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.