< Back
தேசிய செய்திகள்
மைசூரு தசரா விழாவையொட்டி  மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
தேசிய செய்திகள்

மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
1 Oct 2023 12:15 AM IST

மைசூரு தசரா விழாவையொட்டி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை தன்வீர்சேட் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மைசூரு

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தசரா விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது.

தசரா விழா தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ளன. இந்த நிலையில், தசரா விழாவையொட்டி மைசூரு நகர் நஜர்பாத் பகுதியில் உள்ள சாமுண்டி விகார் மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த விளையாட்டு போட்டிகளை நரசிம்மராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்வீர்சேட் பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.

நேற்று முதல் 3 நாட்கள் வரை இந்த விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. இந்த விழாவில், கலெக்டர் ராஜேந்திரா, விளையாட்டு துறை அதிகாரி ரவீந்திரா, எம்.எல்.சி. மஞ்சேகவுடா உள்பட பலர் கலந்துகொண்டனர். நேற்று குண்டு எறிதல், தடகள போட்டி ஆகியவை நடந்தன.

மேலும் செய்திகள்