< Back
தேசிய செய்திகள்
ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள் - சுதா மூர்த்தி பெருமிதம்
தேசிய செய்திகள்

'ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்' - சுதா மூர்த்தி பெருமிதம்

தினத்தந்தி
|
29 April 2023 6:00 AM IST

'ரிஷியை இங்கிலாந்து பிரதமராக்கியது எனது மகள்' என்று இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி கூறியுள்ளார்.

லண்டன்,

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண்தான் இருக்கிறாள் என்று சொல்வது உண்டு. அந்த பெண்- தாயாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, ஆசிரியையாக இருக்கலாம். இது உண்மைதான்.

இதையொட்டி, பிரபல தொழில் அதிபரும், 'இன்போசிஸ்' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாகப் பரவுகிறது. அதில் சுதா மூர்த்தி கூறி இருப்பதாவது:-

இது மனைவியின் மகிமை. ஒரு மனைவியால் கணவரை எப்படி மாற்ற முடியும் என்று பாருங்கள. என் கணவரை (நாராயணமூர்த்தி) நான் தொழில் அதிபர் ஆக்கினேன். என் மகள், அவளது கணவரை (ரிஷி சுனக்) இங்கிலாந்து நாட்டுக்கு பிரதமர் ஆக்கி இருக்கிறாள்.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், 2009-ம் ஆண்டு, என்.ஆர்.நாராயணமூர்த்தி-சுதா தம்பதியரின் மகள் அக்ஷதா மூர்த்தியை காதலித்து மணந்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டின் பிரதமராக ரிஷி சுனக் (வயது 42) உயர்ந்தார். அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் ரிஷி சுனக்தான்.

மேலும் செய்திகள்