ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம் மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிகொள்ள வேண்டும்; முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பேட்டி
|ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லிம் மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிகொள்ள வேண்டும் என்று முன்னாள் மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.
சிவமொக்கா;
மந்திரி ஈசுவரப்பா பேட்டி
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஹிஜாப் விவகாரம் மீண்டும் தலை தூக்கியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஈசுவரப்பா சிவமொக்காவில் தனது இல்லத்தில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மங்களூருவில் சில முஸ்லிம் மாணவிகள் மீண்டும் ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கண்டிக்கத்தக்கது. இதில் முஸ்லிம் மக்கள் தங்கள் மனநிலையை மாற்றிகொள்ள வேண்டும்.
ஒற்றுமையாக...
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மதிப்பளித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.
மாநிலத்தில் கலவரத்தை தூண்ட மாணவர்களை பின்னால் இருந்து சில விஷமிகள் இயக்குகின்றனர். நாட்டின் சட்ட திட்டங்களை அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்க வேண்டியது கடமையாகும். இது மக்களிடையே வேற்றுமையை கலைந்து ஒற்றுமையாக வாழ வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.