< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மதவழிபாட்டு தலத்திற்கு பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்
|8 Sept 2022 5:10 AM IST
மதவழிபாட்டு தலத்திற்கு பாடம் படிக்க வந்த10 வயது சிறுமியை மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சதாபாத் பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தில் மத ரீதியிலான பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இங்கு இஸ்லாமிய மத மாணவ - மாணவிகள் மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்த மதப்பாடங்களை இஸ்லாமிய மதபோதகர் ஒருவர் கற்பித்து வருகிறார்.
இந்நிலையில், மதப்பாடம் படிக்க வந்த 10 வயது சிறுமியை மதவழிபாட்டு தலத்தில் வைத்தே பாடம் எடுக்கும் அந்த மதபோதகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மதபோதகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.