30 ஆண்டுகளாக தேடப்பட்ட கொலை குற்றவாளி; கைதுக்கு பின் சில மணிநேரங்களில் மரணம்
|காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சில மணிநேரத்தில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சமஸ்திப்பூர்,
பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் கிருஷ்ண பகவான் ஜா என்ற துன்னா ஜா (வயது 55). கொலை குற்றவாளியான இவர் 30 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தப்பி வந்துள்ளார்.
இந்த நிலையில், ரகசிய தகவல் அடிப்படையில், சராய்ரஞ்சன் பகுதியில் மறைந்திருந்த அவரை, கடந்த செவ்வாய் கிழமை மாலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், சில மணிநேரங்களில் அவர் உயிரிழந்து விட்டார்.
அவர் போலீஸ் காவலில் அடித்து கொல்லப்பட்டு உள்ளார் என கூறி அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் செவ்வாய் கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட சில மணிநேரத்தில் அவருடைய உடல்நிலை மோசமடைந்தது.
அவர் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் அறிவித்து விட்டனர் என கூறியுள்ளார்.