< Back
தேசிய செய்திகள்
மகள்கள் மீது தீவைத்த கொடூர தாய்
தேசிய செய்திகள்

மகள்கள் மீது தீவைத்த கொடூர தாய்

தினத்தந்தி
|
11 Dec 2022 3:38 AM IST

குடும்ப தகராறில் ஒரு பெண் தனது 2 மகள்கள் மீது தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு மகள் இறந்துவிட்டாள். மற்றொரு மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோலார் தங்கவயல்:

குடும்ப தகராறில் ஒரு பெண் தனது 2 மகள்கள் மீது தீவைத்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு மகள் இறந்துவிட்டாள். மற்றொரு மகளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மீது தீவைப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமநேர் தாலுகா போசாயி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குருவபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(வயது 25). குடும்பத்தகராறு காரணமாக ஜோதி தனது 2 பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் சொந்த ஊரில் இருந்து கோலார் மாவட்டம் முல்பாகல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மலைப்பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் தான் தயாராக வைத்திருந்த பெட்ரோலை தனது 2 பிள்ளைகளான அக்‌ஷயா(வயது 7) மற்றும் உதயஸ்ரீ(6) ஆகியோர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.

பின்னர், தன் மீதும் பெட்ரோலை ஊற்றி கொண்டுள்ளார். ஆனால் திடீரென மனம் மாறி தீ வைத்து கொள்ளவில்லை. அதற்குள் இரு பிள்ளைகளும் தீ காயங்களுடன் அலறி துடித்து கூச்சலிட்டுள்ளனர். சிறுமிகளின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.

பரபரப்பு

அதற்குள் அக்‌ஷயா தீயில் கருகி பரிதாபமாக இறந்து போனார். தீ காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த உயதஸ்ரீயை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக முல்பாகல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உதயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முல்பாகல் போலீசார் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், இறந்துபோன அக்‌ஷயாவின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமிகளின் தாயார் ஜோதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் முல்பாகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்