< Back
தேசிய செய்திகள்
தி.மு.க. முன்னாள் நிர்வாகியை கொல்ல முயற்சி: தர்மபுரி வாலிபர் கைது
தேசிய செய்திகள்

தி.மு.க. முன்னாள் நிர்வாகியை கொல்ல முயற்சி: தர்மபுரி வாலிபர் கைது

தினத்தந்தி
|
11 Sept 2023 2:49 AM IST

தி.மு.க. முன்னாள் நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் தர்மபுரி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

தமிழ்நாடு மதுரையை சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர், தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஆவார். கடந்த 4-ந் தேதி பெங்களூரு பானசவாடி அருகே கம்மனஹள்ளி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து வி.கே.குருசாமியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொல்ல முயன்றது. இதுகுறித்து பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டு கொலையாளிகளை தேடிவருகிறார்கள்.

மேலும் வி.கே.குருசாமியை கொலை செய்ய முயன்றதாக பல்வேறு நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், வி.கே.குருசாமியை கொல்ல முயன்றதாக தமிழ்நாடு தர்மபுரியை சேர்ந்த வாலிபரான பிரசன்னாவை பானசவாடி போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது தலைமறைவாக இருக்கும் 4 பேர் குறித்து போலீசாருக்கு பிரசன்னா சில தகவல்களை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்