< Back
தேசிய செய்திகள்
நடத்தையில் சந்தேகப்பட்டு சுவரில் தலையை முட்டி பெண் கொலை; கணவர் கைது
தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு சுவரில் தலையை முட்டி பெண் கொலை; கணவர் கைது

தினத்தந்தி
|
25 Feb 2023 2:01 AM IST

ராய்ச்சூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு சுவரில் தலையை முட்டி பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு சுவரில் தலையை முட்டி பெண்ணை கொலை செய்த வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவரில் தலையை முட்டி...

ராய்ச்சூர் மாவட்டம் மான்வி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சாதாபுரா கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி பவித்ரா (வயது 22). இந்த தம்பதிக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. கூலித் தொழிலாளிகளான தம்பதி, செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். தனது மனைவி பவித்ராவின் நடத்தையில் நாகராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், நேற்று முன்தினம் நள்ளிரவும் அவர்களுக்குள் சண்டை உண்டானது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த நாகராஜ் தனது மனைவியை அடித்து, உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் பவித்ராவின் தலையை வீட்டின் சுவரில் நாகராஜ் முட்டியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் நடத்தையில் சந்தேகம்

இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து நாகராஜ் தப்பி ஓடிவிட்டார். பவித்ரா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மான்வி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது பவித்ராவின் நடத்தையில் நாகராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு நாகராஜ், பவித்ராவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மான்வி போலீசார் வழக்குப்பதிவு செயது விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்