< Back
தேசிய செய்திகள்
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலை
தேசிய செய்திகள்

கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலை

தினத்தந்தி
|
15 Jan 2023 12:15 AM IST

கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவமொக்கா:

கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவமொக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்காதல்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ள தனியார் தங்கும்விடுதியில் ஒரு அறையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து பத்ராவதி டவுன் போலீசாருக்கு விடுதி ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விடுதியில் உயிரிழந்து கிடப்பவர் லாரி டிரைவரான பர்வேஷ் (வயது 38) என்பது தெரிந்தது. மேலும், ஹாசன் மாவட்டம் சன்னராயப்பட்டாவை சேர்ந்தவர் ஆயிஷா. இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இந்த நிலையில் ஆயிஷாவுக்கும், ஜவகல் தாலுகாவை சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளத்காதலாக மாறியது. இருவரும் தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதுகுறித்து ஆயிஷாவின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியை கண்டித்து உள்ளார்.

வலைவீச்சு

எனினும், அவர் பர்வேசுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவில் உள்ள தங்கும்விடுதியில் பர்வேசும், ஆயிஷாவும் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் ஆத்திரமடைந்த ஆயிஷா, அவரை தாக்கி கொலை செய்து இருப்பது தெரிந்தது. ஆனால் இந்த கொலையில் ஆயிஷாவிக்கு யாரேனும் உதவி செய்தனரா?, கொலை செய்வதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்