< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெண் கொலையில் நண்பர் கைது
|30 Oct 2022 12:15 AM IST
பெண் கொலையில் வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா பர்கானாகல் தாண்டா கிராமத்தை சேர்ந்தவர் கீதாபாய் (வயது 44). இந்த நிலையில் பெங்களூரு கார்வேபாவிபாளையா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் கீதாபாயின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரை யாரோ கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கீதாபாயின் மகன் ஆகாஷ் அளித்த புகாரின்பேரில் மைகோ லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் கீதாபாயை அவரது நண்பரான சந்துரு என்பவர் பணத்தகராறில் கொலை செய்தது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.