< Back
தேசிய செய்திகள்
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை; தங்கை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
தேசிய செய்திகள்

பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை; தங்கை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
26 Oct 2022 12:15 AM IST

உப்பள்ளியில் பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அவருடைய தங்கை மகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

உப்பள்ளி:

உப்பள்ளியில் பெண்ணை கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்துச் சென்ற அவருடைய தங்கை மகனை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கொலை

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கசபாபேட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட நேர்கார் நகர் பகுதியை சேர்ந்தவர் கமலம்மா(வயது 70). கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, சகோதரியின் மகன் மால்தேஷ்(48) என்பவர் கமலம்மாவின் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு சாப்பிட்டுவிட்டு 2 பேரும் தூங்குவதற்கு சென்றுவிட்டனர்.

நேற்று காலை வெகுநேரமாகியும் கமலம்மா எழுந்திருக்கவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு கமலம்மா காது மற்றும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கசபாபேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

வாலிபருக்கு வலை

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கமலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கமலம்மாவின் சகோதரியின் மகன் மால்தேஷ், நகைக்காக கமலம்மாவின் காதை அறுத்துள்ளார்.

பின்னர் அவர் கூச்சலிட்டதும், கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதுகுறித்து கசபாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மால்தேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்