< Back
தேசிய செய்திகள்
விவசாயி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; கழுத்தை நெரித்து கொன்று உடலை ஏரியில் வீசியது அம்பலம் - மனைவி, கள்ளக்காதலன் கைது
தேசிய செய்திகள்

விவசாயி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; கழுத்தை நெரித்து கொன்று உடலை ஏரியில் வீசியது அம்பலம் - மனைவி, கள்ளக்காதலன் கைது

தினத்தந்தி
|
5 Aug 2022 2:20 AM IST

விவசாயி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்று உடலை ஏரியில் வீசிய சம்பவம் நடந்துள்ளது.

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி அருகே வசித்து வந்தவர் பெண்டப்பா. விவசாயி. இவரது மனைவி மகேந்திரம்மா. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி கிராமத்தில் உள்ள ஏரியில் பெண்டப்பா பிணமாக மிதந்தார். கடன் தொல்லையால் பெண்டப்பா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மகேந்திரம்மா கூறினார். இதுபற்றி சிஞ்சோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.


இந்த நிலையில் மகேந்திரம்மாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் உண்டானது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மகேந்திரம்மாவுக்கும், சின்னப்பா என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததும், அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பற்றி அறிந்ததும் பெண்டப்பா, மகேந்திரம்மாவை கண்டித்து வந்து உள்ளார்.


இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரம்மா, கள்ளக்காதலன் சின்னப்பாவுடன் சேர்ந்து பெண்டப்பாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மகேந்திரம்மா, சின்னப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்