< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உண்டு உறைவிட பள்ளியில் நகரசபை தலைவர், கமிஷனர் ஆய்வு
|24 Aug 2022 8:39 PM IST
சிக்கமகளூரு டவுனில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் நகரசபை தலைவர், கமிஷனர் ஆய்வு செய்தனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு டவுன் நகரசபை தலைவர் வேணுகோபால் மற்றும் கமிஷனர் பசவராஜ் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் உப்பள்ளி பகுதியில் உள்ள அம்பேத்கர் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
அவர்கள் பள்ளியின் சமையல் கூடத்திற்கு சென்று அங்கு சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, காய்கறிகள் மற்றும் பருப்பு தானியங்களை பார்வையிட்டனர்.
அப்போது பருப்பு போன்ற தானியங்களில் புழுக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நகரசபை தலைவர், கமிஷனர் ஆகியோர் சமையல் கூட ஊழியர்களை கண்டித்து தரமான உணவுகளை சமைத்து வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பணி இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் அவர்கள், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.