< Back
தேசிய செய்திகள்
மும்பை: தலையில் ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!
தேசிய செய்திகள்

மும்பை: தலையில் ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!

தினத்தந்தி
|
20 Dec 2023 10:54 PM IST

உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 9 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை அந்த பெண் தலைமுடி விக்கில் மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உள்ளாடைகளிலும் அப்பெண் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்