மும்பை: வேலை தருவதாக ஆசை காட்டி பெண் பாலியல் வன்கொடுமை
|ஜிம் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பை,,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவு பகுதியை சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணுக்கு ஜிம் உரிமையாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜிம் உரிமையாளரிடம் இளம்பெண் வேலை வாங்கித்தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு, அந்த நபர், தான் மும்பையில் ஒரு உடற்பயிற்சி கூடம் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், நல்ல சம்பளத்தில் வேலை தருவதாகவும் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். ஜிம் உரிமையாளர் கூறியதை நம்பிய அந்த இளம்பெண் அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார்.
அப்போது மும்பையில் ஒரு ஓட்டலில் வைத்து இளம்பெண்ணை ஜிம் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வேலை தருவதாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஜிம் உரிமையாளர் மீது பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஜிம் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.