மும்பையில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதை: 3பேர் கொண்ட கும்பல் அட்டூழியம்
|பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மும்பை,
மும்பையில் 42 வயது பெண்ணை மூன்று பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை அதிகாலையில் குர்லாவில் இந்த சம்பவம் நடந்தது.
பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல், அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வெறி அடங்காத அந்த கொடூரர்கள் பெண்ணின் கைகள், மார்பு பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், சிகரெட்டை கொண்டு தீக்காயப்படுத்தியுள்ளனர்.
மூன்று பேர் கொண்ட கும்பலில் ஒருவர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, நடந்ததை போலீசில் கூறினால், இதனை பரப்பிவிடுவேண் என்று மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது அண்டை வீட்டாரிடம் கூறினார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.