மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 55,370.82 புள்ளிகளாக சரிவு
|மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 55,370.82 புள்ளிகளாக இன்று சரிவடைந்து உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 55,370.82 புள்ளிகளாக இன்று சரிவடைந்து உள்ளது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின்னர், சென்செக்ஸ் குறியீடு 10.35 புள்ளிகள் அல்லது 0.02 சதவீதம் சரிவடைந்து 55,370.82 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 21.10 புள்ளிகள் அல்லது 0.13 சதவீதம் சரிவடைந்து 16,501.70 புள்ளிகளாக உள்ளது.
எனினும், சென்செக்ஸ் பங்குகளில், எச்.யூ.எல்., ஐ.டி.சி., எச்.டி.எப்.சி. ட்வின்ஸ், நெஸ்லே மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
தொடர்ந்து மூன்றாவது நாளாக சென்செக்ஸ் குறியீடு சரிவு அடைந்துள்ளது.
நிப்டி பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், டி.சி.எஸ். மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. ஆகியவை பின்னடைவை சந்தித்து இருந்தன. எனினும், டி.சி.எஸ். 56.05 புள்ளிகள் அதிகரித்து 3,411.25 ஆக இருந்தது. ஏசியன் பெயிண்ட்ஸ் 1.70 புள்ளிகள் சரிந்து 2,850.80 ஆக இருந்தது.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் பவர் கிரிட் கார்ப், எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் மற்றும் எச்.டி.எப்.சி. லைப் ஆகியவை கடுமையாக நஷ்டம் அடைந்திருந்தன.