< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 66 ஆயிரம் புள்ளிகளாக உயர்வு
|13 July 2023 11:54 AM IST
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 66 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவில் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு உள்ளது.
புதுடெல்லி,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் குறியீடு 66,018 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 19,562 புள்ளிகளாக உயர்ந்து உள்ளது.
மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் குறியீடு இன்று காலை 1 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது.
நிப்டி குறியீட்டில் டி.சி.எஸ்., ஹிண்டால்கோ, எல்.டி.ஐ.மைண்ட் ட்ரீ, இன்போசிஸ் மற்றும் டெக் மகிந்திரா ஆகியவற்றின் பங்குகள் லாபமடைந்து இருந்தன. நிப்டியில் 37 நிறுவனங்கள் இன்று காலை உச்சமடைந்து உள்ளன. மற்ற பங்குகள் நஷ்டத்துடன் காணப்பட்டன.