< Back
தேசிய செய்திகள்
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் சரிவு
தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் சரிவு

தினத்தந்தி
|
20 Sept 2023 1:30 PM IST

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 700 புள்ளிகள் வரை சரிவடைந்து உள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று திடீரென 700 புள்ளிகள் வரை சரிவடைந்து 66,900.90 புள்ளிகளாக காணப்பட்டது. நாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்றைய தினம் பங்கு சந்தைகள் மூடப்பட்டன.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கிய பின்னர் மதியம் அளவில் திடீரென வர்த்தகம் பெருமளவில் சரிவை சந்தித்தது.

இதனால், சென்செக்ஸ் குறியீட்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், மாருதி, டைட்டன் மற்றும் இந்துஸ்தான் யுனிலீவர் உள்ளிட்ட பிற பெரிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவை சந்தித்துள்ளன. எச்.டி.எப்.சி. வங்கி 3 சதவீதம் வரை சரிவடைந்து உள்ளது.

எனினும், என்.டி.பி.சி., இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் மகிந்திரா அண்ட் மகிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் ஈட்டியுள்ளன.

தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி குறியீடு 19,500 புள்ளிகளுக்கு கீழ் சென்றடைந்து உள்ளது. ஆசிய பங்கு சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உள்ளிட்டவற்றின் வர்த்தகம் சரிவடைந்து காணப்படுகிறது.

மேலும் செய்திகள்