< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் சரிவு
|31 May 2022 10:32 AM IST
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் சரிவடைந்து உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 474.85 புள்ளிகள் அல்லது 0.85 சதவீதம் சரிவடைந்து 55,450.89 புள்ளிகளாக உள்ளது.
இதில், சன் பார்மா, எச்.டி.எப்.சி., இன்போசிஸ், எச்.சி.எல். டெக், டைட்டன், கோடக் வங்கி, விப்ரோ, டி.சி.எஸ். மற்றும் டெக் மகிந்திரா ஆகியவை அதிக சரிவை (1 முதல் 2 சதவீதம்) சந்தித்து உள்ளன. எனினும், டாடா ஸ்டீல் மற்றும் என்.டி.பி.சி. ஆகியவை லாபம் கண்டுள்ளன.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 122.90 புள்ளிகள் அல்லது 0.74 சதவீதம் சரிவடைந்து 16,538.50 புள்ளிகளாக உள்ளது.