< Back
தேசிய செய்திகள்
மும்பை பங்கு சந்தை:  சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் சரிவு
தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் சரிவு

தினத்தந்தி
|
11 Oct 2022 11:26 AM IST

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 350 புள்ளிகள் சரிவடைந்து 58 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது.



மும்பை,


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 2-வது நாளாக சரிவை சந்தித்து உள்ளது. இதன்படி, இன்று காலை 350 புள்ளிகள் சரிவடைந்து 58 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றது.

எனினும், ஏசியன் பெயிண்ட்ஸ், விப்ரோ, இன்போசிஸ், எச்.சி.எல் டெக், ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டி.சி.எஸ். நிறுவன பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் இன்று சரிவடைந்து 17,150 புள்ளிகளுக்கும் கீழே சென்றது.

இதில், எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்.டி.எப்.சி. லைப், எச்.யூ.எல். மற்றும் மாருதி சுசுகி ஆகியவற்றின் பங்குகள் பெருமளவில் சரிவடைந்து இருந்தன.

எனினும், அதானி போர்ட்ஸ், விப்ரோ, அதானி என்டர்பிரைசஸ், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்துடன் காணப்பட்டன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் ரூ.82.35 என்ற அளவில் இன்று வீழ்ச்சி கண்டது. நேற்று வர்த்தக முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.32 என்ற அளவில் இருந்தது.

உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலரின் தேவை அதிகரிப்பு உள்ளிட்டவை பங்குகள் சரிவு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணங்களாக கூறப்படுகின்றன. எனினும், இந்த நிலைமை சீரடைந்து இந்திய பங்கு வர்த்தகம் உயர்வடையும் என பங்கு வர்த்தக நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்