< Back
தேசிய செய்திகள்
மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 555.15 புள்ளிகள் சரிவு; முன்னணியில் அதானி குழுமம்
தேசிய செய்திகள்

மும்பை பங்கு சந்தை: சென்செக்ஸ் குறியீடு 555.15 புள்ளிகள் சரிவு; முன்னணியில் அதானி குழுமம்

தினத்தந்தி
|
30 Jan 2023 10:40 AM IST

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 555.15 புள்ளிகள் சரிவடைந்து காணப்பட்டது.


மும்பை,


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 555.15 புள்ளிகள் சரிவடைந்து 58,775.75 புள்ளிகளாக இருந்தது.

இதில், அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வர்த்தக தொடக்கத்தில் 10% லாபத்துடன் முன்னணியில் உள்ளன. வர்த்தக தொடக்கத்தில் பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பஜாஜ் பைன்செர்வ் ஆகியவையும் லாபத்துடன் இருந்தன.

டெக் மகிந்திரா, கோபோர்ஜ், எம்பாசிஸ், இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல். டெக்னாலஜீஸ் உள்ளிட்ட ஐ.டி. நிறுவனங்களும் பங்கு வர்த்தகத்தில் லாபம் அடைந்திருந்தன.

பொது துறை வங்கிகள் மற்றும் உலோக துறை ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன. எண்ணெய் மற்றும் வாயு நிறுவனங்கள் வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்திருந்தன.

எஸ்.பி.ஐ. லைப், பவர் கிரிட் மற்றும் எச்.யூ.எல். ஆகிய நிறுவனங்களும் சரிவை கண்டன. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடும் வர்த்தக தொடக்கத்தின்போது, 17,500 புள்ளிகளுக்கும் கீழ் சரிவை அடைந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்