பிரம்மாஸ்திரா படம் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மும்பை போலீஸ்- வைரலாகும் பதிவு
|மும்பை போலீசார் 'பிரம்மாஸ்திரா' படத்தின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
மும்பை,
அயன் முகர்ஜி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரை அரங்குகளில் வெளியாகியுள்ள இருக்கும் படம் பிரம்மாஸ்திரா. இதில் நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்திருக்கிறார்.
இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரிலீசான இப்படம் முதல் நாளில் 75 கோடி வசூலித்ததாகவும், இரண்டாம் நாள் முடிவில் 160 கோடி வசூலித்ததாகவும் படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் மும்பை போலீசார் 'பிரம்மாஸ்திரா' படத்தின் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
மும்பை போலீசார் தங்கள் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் கூறுகையில், வாகன ஓட்டிகள் உங்களிடம் வாணர் அஸ்திரம் இருந்தாலும், போக்குவரத்து சிக்னலை தாண்டாதீர்கள் எனவும் நந்தி அஸ்திரம் இருந்தாலும், வாகனத்தின் "ஆக்சிலரேட்டரில்" வலிமையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
அஸ்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள பிரம்மாஸ்திரா' படத்தில் வாணர் அஸ்திரம் வேகத்தையும் சுறுசுறுப்பையும் வழங்குகிறது. அதே போல் ஆயிரம் காளைகளின் சக்தியை நந்தியாஸ்திரா வழங்குகிறது. இதை மையப்படுத்தி மும்பை போலீசார் வெளியிட்டுள்ள போக்குவரத்து விழிப்புணர்வு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.