< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரூ.10 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்: 3 பேர் கைது
|25 Nov 2023 3:23 AM IST
தொழிலதிபரை கடத்திய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மும்பை,
மும்பையில் ரூ.10 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்டார். இதையடுத்து தொழிலதிபரின் மகனிடம், உன் தந்தையை நாங்கள் கடத்திவைத்துள்ளோம் என்றும், உன் தந்தையை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 10 கோடி பணம் தர வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தொழிலதிபரின் மகன், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைதுசெய்தனர். அத்துடன், கடத்தப்பட்ட தொழிலதிபரையும் மீட்டனர். கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.