< Back
தேசிய செய்திகள்
மும்பை, தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக ஏற்றத்துடன் தொடங்கின
தேசிய செய்திகள்

மும்பை, தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக ஏற்றத்துடன் தொடங்கின

தினத்தந்தி
|
27 Dec 2022 5:51 AM GMT

மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக இன்று ஏற்றத்துடன் தொடங்கி முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளன.



மும்பை,


நடப்பு ஆண்டின் இறுதி வாரத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு பின்னர் தொடங்கிய நேற்றைய முதல் நாள் பங்கு வர்த்தகம் லாபத்துடன் காணப்பட்டது. கடந்த வாரம் இறுதியில், மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் 59,845.29 புள்ளிகளுடன் முடிவடைந்து இருந்தது.

இதன்படி, மும்பை பங்கு சந்தையில் நேற்று 59,755.08 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் குறியீடு, காலை 9.40 மணியளவில் 447.68 புள்ளிகள் வரை உயர்ந்து 60,292.97 புள்ளிகளாக காணப்பட்டது. அதிக அளவாக காலையில் 60.307.94 புள்ளிகள் வரை சென்றது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு நேற்று காலையில் 100 புள்ளிகள் வரை உயர்ந்து 17,950 புள்ளிகளாக காணப்பட்டது.

இந்நிலையில், மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகள் 2-வது நாளாக இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 317.49 புள்ளிகள் உயர்ந்து 60,883.92 புள்ளிகளாக காணப்பட்டது.

டால்மியா சுகர்ஸ், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத யூனியன் வங்கி, சுஸ்லான் எனர்ஜி ஆகியவை லாபத்துடன் காணப்பட்டன. மோர்பென், அஜந்தா பார்மா மற்றும் ஆஸ்டிரோ மைக்ரோ ஆகியவை இன்று காலை சற்று சரிவுடன் காணப்பட்டன.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 106.50 புள்ளிகள் உயர்ந்து 18,121.50 புள்ளிகளாக இருந்தது. டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, ஓ.என்.ஜி.சி., ஜே.எஸ்.டபிள்யூ ம ற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை லாபத்துடன் உயர்ந்து காணப்பட்டன.

விடுமுறையை முன்னிட்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஹாங்காங் பங்கு சந்தைகள் மூடப்பட்டு உள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வர்த்தக தொடக்கத்தில், ரூ.82.70 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய ரூ.82.65 என்ற மதிப்பை விட சற்று சரிவடைந்து இருந்தது.

மேலும் செய்திகள்