< Back
தேசிய செய்திகள்
30 ரூபாய்க்காக நண்பனை கொலை செய்த நபர்...மும்பையில் அதிர்ச்சி

கோப்புக்காட்சி 

தேசிய செய்திகள்

30 ரூபாய்க்காக நண்பனை கொலை செய்த நபர்...மும்பையில் அதிர்ச்சி

தினத்தந்தி
|
13 Aug 2024 3:05 PM IST

நண்பனை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சைப் ஜாஹித் அலி மற்றும் சக்கன் அலி. இவர்கள் இருவரும் மும்பையில் உள்ள ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். நேற்று இரவு இருவரும் குர்லாவில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக ஆட்டோவில் சென்றுள்ளனர்.

அங்கு ஆட்டோவிற்கு 30 ரூபாய் தருவதற்காக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் இறுதியில் கைகலப்பாகி சக்கனை சைப் தள்ளியுள்ளார். இதில் கீழே விழுந்த சக்கனின் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தகலவறிந்த குர்லா போலீசார் தப்பியோடிய சைப் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதையடுத்து சைபை கல்யாண் ரெயில் நிலையத்தில் இருந்து பிடித்த போலீசார் குர்லா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்