உல்லாசத்திற்கு வர மறுத்த காதலியை கொலைவெறியுடன் தாக்கிய காதலன்..! அதிர்ச்சி சம்பவம்
|வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த முகர்ஜி, அப்பெண்ணின் கழுத்தை நெரித்து, பாறையில் ஓங்கி அடித்துள்ளார்.
மும்பை,
மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள கல்யான் என்ற பகுதியில் வசிப்பவர் ஆகாஷ் முகர்ஜி. ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் இவர், அதே நிறுவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ள நிலையில், கடந்த புதன் கிழமை இருவரும் மும்பையின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளனர். பின்னர் மாலையில் மும்பையில் உள்ள பிரபலமான நடைபாதை மற்றும் கடலோரப் பகுதியான பாந்த்ரா பேண்ட்ஸ்டா பகுதியில் இருவரும் இருந்துள்ளனர்.
பின்னர் இரவு நேரத்தை கடந்ததும், அப்பெண், தன்னை வீட்டில் விடுமாறு ஆகாஷ் முகர்ஜியுடம் கூறியுள்ளார். உன்னை உனது வீட்டில் விடுவதாக கூறிய முகர்ஜி, உன்னை விரைவில் திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறியதுடன், தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், முகர்ஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த முகர்ஜி, அப்பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளார்.
பின்னர் அருகில் இருந்த பாறையை நோக்கி பெண்ணின் தலையை ஓங்கி அடித்துள்ளார். தொடர்ந்து கொலை வெறியுடன் நீரில் மூழ்கடிக்க முயன்றுள்ளார். இதனால் அப்பெண் வலி தாங்கமுடியாமல் அலறியுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து முகர்ஜியிடம் இருந்து பெண்ணை காப்பாற்றிய நிலையில், இதுகுறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, முகர்ஜியை கைதுசெய்தனர். அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்ப்திவு செய்துள்ள போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.