< Back
தேசிய செய்திகள்
மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே சந்திப்பு
தேசிய செய்திகள்

மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசுடன் ராஜ்தாக்கரே சந்திப்பு

தினத்தந்தி
|
15 July 2022 2:30 PM IST

மராட்டிய துணை முதல் மந்தி தேவேந்திர பட்னாவிசை மகராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே சந்தித்துப் பேசினார்.

மும்பை,

மராட்டிய துணை முதல் மந்தி தேவேந்திர பட்னாவிசை மகராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே சந்தித்துப் பேசினார். மும்பை தாதர் பகுதியில் உள்ள தாக்கரேவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அண்மையில் துணை முதல் மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்ட தேவேந்திர பட்னாவிசுக்கு ராஜ்தாக்கரே பாராட்டி கடிதம் எழுதியிருந்தார்.

கட்சியின் மீதான விசுவாசத்திற்கு சிறந்த உதாரணமாக திகழ்வதாகவும் பட்னாவிசை ராஜ்தாக்கரே தனது கடிதத்தில் பாராட்டியிருந்தார். மராட்டியத்தில் இன்னும் மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறாத நிலையிலும் விரைவில் மும்பை மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்