< Back
தேசிய செய்திகள்
திடீரென வீசிய துர்நாற்றம்.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த இண்டிகோ விமானம்
தேசிய செய்திகள்

திடீரென வீசிய துர்நாற்றம்.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த இண்டிகோ விமானம்

தினத்தந்தி
|
9 Feb 2024 10:54 AM IST

டெல்லியில் விமானம் தரையிறக்கப்பட்டதையடுத்து, அதில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது

புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு இன்று காலையில் இண்டிகோ விமானம் புறப்பட்டுச் சென்றது. சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்தது. விமானத்திற்குள் திடீரென துர்நாற்றம் வீசியதால் பாதுகாப்பு கருதி விமானத்தை தரையிறக்க அனுமதிக்கும்படி விமானி கேட்டுக்கொண்டார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டு பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

இதுபற்றி விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'விமானத்தில் சில நிமிடம் துர்நாற்றம் வீசியதால் முன்னெச்சரிக்கையாக, விமானி மீண்டும் டெல்லியில் தரையிறங்கினார். அந்த விமானத்தில் இருந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்' என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்