< Back
தேசிய செய்திகள்
மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில்: 100 கி.மீ.க்கு பாலங்கள் கட்டுமானம் நிறைவு
தேசிய செய்திகள்

மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில்: 100 கி.மீ.க்கு பாலங்கள் கட்டுமானம் நிறைவு

தினத்தந்தி
|
25 Nov 2023 7:04 AM IST

மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

மும்பை,

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே ரூ.1.08 லட்சம் கோடி செலவில் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்துக்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிா்ந்துள்ளன. அதன்படி, திட்டச் செலவில் ரூ.10,000 கோடியை மத்திய அரசும், ரூ.10,000 கோடியை குஜராத் மற்றும் மகாராஷ்டிர அரசுகளும் ஏற்றுள்ளன. ஜப்பானிடம் இருந்து 0.1 சதவீத வட்டிக்கு பெறப்படும் கடன் மூலம் எஞ்சிய செலவு கையாளப்பட உள்ளது. புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கும் பணியை என்ஹெச்எஸ்ஆா்சிஎல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத் திட்டத்தின் கீழ், 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகளும், 250 கி.மீ.க்கு பாலத் தூண்கள் அமைக்கும் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்று தேசிய அதிவேக ரெயில் காா்ப்பரேஷன் நிறுவனம் (என்ஹெச்எஸ்ஆா்சிஎல்) தெரிவித்துள்ளது.

தற்போது 100 கி.மீ.க்கு பால கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள பாா் மற்றும் ஓளரங்கா ஆறுகள், நவ்சாா் மாவட்டத்தில் உள்ள பூா்னா, மிந்தோலா, அம்பிகா மற்றும் வெங்கானியா ஆறுகள் மீது கட்டப்பட்ட பாலங்களும் அடங்கும் என்றும் என்ஹெச்எஸ்ஆா்சிஎல் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்