< Back
தேசிய செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்
தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தினத்தந்தி
|
9 Jan 2024 8:15 PM IST

முல்லைப் பெரியாறு அணை கட்டுமான வகையில் வலுவாக உள்ளதாக தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடக் கோரி கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், "முல்லைப் பெரியாறு அணை நீரியியல் ரீதியாகவும், நில அதிர்வுகளை தாங்கும் வகையிலும், கட்டுமான வகையிலும் வலுவாக உள்ளது. அணையை பலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த பிறகு பாதுகாப்பு தொடர்பான ஒருங்கிணைந்த அர்த்தமுள்ள ஆய்வை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடும் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்