< Back
தேசிய செய்திகள்
முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது - மருத்துவமனை அறிக்கை
தேசிய செய்திகள்

முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

தினத்தந்தி
|
6 Oct 2022 6:24 PM IST

முலாயம் சிங் யாதவ்வின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங் யாதவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த சூழலில், ஐ.சி.யூ.வில் அவரை சேர்த்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முலாயம் சிங் யாதவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முலாயம் சிங் யாதவ் தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறார். அவர் மேதாந்தா மருத்துவமனையின் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு விரிவான நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.






மேலும் செய்திகள்