< Back
தேசிய செய்திகள்
பத்ரிநாத் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை
தேசிய செய்திகள்

பத்ரிநாத் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை

தினத்தந்தி
|
14 Oct 2022 2:49 AM IST

பத்ரிநாத் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.

பத்ரிநாத்,

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று உத்தரகாண்டின் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார். இமயமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.

முன்னதாக முகேஷ் அம்பானி கடந்த சில வாரங்களாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாத்ஜி கோயில் சென்று சாமி தரிசனம் செய்தார். ஆந்திரா சென்று அங்கு திருப்பதி வெங்கடாஜலதிபதி கோயிலில் சாமி தரிசனம் செய்ததுடன், திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கினார். தொடர்ந்து கேரளாவில் குருவாயூர் கோயிலில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்