< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பத்ரிநாத்-கேதர்நாத் கோவில் கமிட்டிக்கு ரூ.5 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி
|13 Oct 2023 4:27 AM IST
பத்ரிநாத்-கேதர்நாத் கோவில் கமிட்டிக்கு முகேஷ் அம்பானி ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.
புதுடெல்லி,
இந்திய தொழிலதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித தளங்களான பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
அங்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அம்பானியின் குடும்பத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முகேஷ் அம்பானியுடன் அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரும் வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து பத்ரிநாத்-கேதர்நாத் கோவில் கமிட்டிக்கு ரூ.5 கோடி நிதியை முகேஷ் அம்பானி வழங்கினார்.