< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அனைத்து எம்.பி.க்களும் நாளை குழு புகைப்படம் எடுக்க அழைப்பு
|18 Sept 2023 3:15 AM IST
அனைத்து எம்.பி.க்களும் நாளை குழு புகைப்படம் எடுக்க அழைப்பு
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு சபை இடம்பெயர்கிறது. புதிய கட்டிடத்துக்குள் நுழைய எம்.பி.க்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை காலை 9.30 மணிக்கு எம்.பி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். இதற்காக மக்களவை, மாநிலங்களவையின் அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக மக்களவை செயலகம் தெரிவித்தது.