< Back
தேசிய செய்திகள்
குரங்கு அம்மை நோய் தடுப்பு பணி : மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

குரங்கு அம்மை நோய் தடுப்பு பணி : மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம்

தினத்தந்தி
|
27 Sept 2024 2:45 AM IST

குரங்கு அம்மை நோய் தடுப்பு பணிகளை வலுப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, குரங்கு அம்மை (Mpox) தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனையை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா மாநிலங்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், குரங்கு அம்மை நோயின் உருமாறிய வகையான கிளேட் 1 வகையில் சிக்கல்கள் அதிகம் என்பதால் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தடுப்பு நடவடிக்கைகளை சரியாக எடுக்க வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதே நேரத்தில் மக்களிடையே எந்த பீதியும் ஏற்படாமல் தடுப்பதும் முக்கியம் என கூறப்பட்டு உள்ளது.

மேலும் ஆரம்பகால நோயறிதலுக்காக அங்கீகரிக்கப்பட்ட PCR கருவிகள் மற்றும் 36 ICMR-ஆதரவு ஆய்வகங்கள் ஆகியவற்றுடன் வலுவான சோதனை உள்கட்டமைப்பு உள்ளது என்று சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்தது. சந்தேகத்திற்கிடமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை நியமித்தல், சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் போதுமான அளவு மருத்துவ உபகரணங்களை உறுதி செய்தல் போன்ற முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இந்த கடிதத்தில் ஆலோசனையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்