< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி
|9 Dec 2023 1:21 AM IST
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது.
இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இதற்காக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.