< Back
தேசிய செய்திகள்
நில தகராறு: பழங்குடியின பெண்ணுக்கு தீ வைப்பு - கொடூர சம்பவம்
தேசிய செய்திகள்

நில தகராறு: பழங்குடியின பெண்ணுக்கு தீ வைப்பு - கொடூர சம்பவம்

தினத்தந்தி
|
3 July 2022 8:36 PM GMT

நில தகராறில் பழங்குடியின பெண்ணுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் கனா மாவட்டம் தனொரியா கிராமத்தை சேர்ந்த 38 வயதான பழங்குடியின பெண் ராம்பிரயாரி பாய். இவரது கணவர் அர்ஜூன்.

இந்த தம்பதிக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதேபகுதியை சேர்ந்த சிலர் அபகரித்துள்ளனர். இது தொடர்பாக ஆக்கிரமிப்பு கும்பலுக்கும் ராம்பிரியாரிக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலயில் ராம்பிரியாரை தாக்கிய அந்த கும்பல் விவசாய நிலத்திலேயே அவர் மீது பெட்ரோல் வீசி தீ வைத்தது.

தீ வைத்த பின்னர் அதை வீடியோவாகும் எடுத்துள்ளனர். தீ வைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதாப், ஸ்யாம், ஹனுமத் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்