< Back
தேசிய செய்திகள்
கம்பால் தாக்கி மாமியார் படுகொலை: வாட்ஸ்அப் வீடியோவால் சிக்கிய மருமகள்கள்
தேசிய செய்திகள்

கம்பால் தாக்கி மாமியார் படுகொலை: 'வாட்ஸ்அப்' வீடியோவால் சிக்கிய மருமகள்கள்

தினத்தந்தி
|
17 April 2024 2:42 AM IST

தாக்குதலுக்கு உள்ளான பெண் 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.

குவாலியர்,

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ஒரு 'வாட்ஸ்அப்' வீடியோ வைரலாக பரவியது. அதில் ஒரு வயதான பெண்ணை 2 பெண்களும், ஒரு ஆணும் சேர்ந்து கம்பால் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

போலீசாரின் விசாரணையில், அந்த வயதான பெண் முன்னி தேவி(65) என்றும், அவரை தாக்கியது அவரது மருமகள்களான சவித்திரி மற்றும் சண்டா என்றும் தெரியவந்தது. முன்னி தேவியின் மூத்தமகன் தர்மேந்திராவும் கூட்டு சேர்ந்து கம்பால் தாக்கி உள்ளார். இந்த தாக்குதலுக்கு மருமகள்களின் குடும்பத்தினர் சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் 2 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்துள்ளார். தாக்கியவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்த நிலையில் சாவித்திரி தேவி மற்றும் 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்